Thootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய
தூதாக்கள் விண்ணில் பாடிய
தயாபரருக்கே
துதி செலுத்து சகல
நரரின் கூட்டமே
மா செய்கைகளைச் செய்கிற
பராபரனைப் போல்
ஆர் என்றவரை உத்தம
கருத்தாய்ப் போற்றுங்கள்
இந்நாள் வரைக்கும் நமக்கு
சுகம் அருளினார்
நீங்கா இக்கட்டைத் தமது
கரத்தால் நீக்கினார்
நாம் செய்திருக்கும் பாவத்தை
பாராதிருக்கிறார்
தெய்வீக ஆக்கினைகள் அன்பாய்
அகற்றினார்
இனியும் நாம் மகிழ்ச்சியாய்
இருக்க சகல
தீங்கையும் அவர் தயவாய்
விலக்கியருள
புவியில் சமாதானத்தை
அவர் தந்தென்றைக்கும்
அன்பாய் நாம் செய்யும் வேலையை
ஆசிர்வதிக்கவும்
நம்மோடே அவர் தயவாய்
இருந்து துக்கமும்
வியாகுலமும் தூரமாய்
விலகப் பண்ணவும்
நாம் சாகுமட்டுக்கும் கர்த்தர்
நாம் தங்கும் கோட்டையும்
நாம் சாகும்போது நம்முட
கதியுமாகவும்
பிரிந்து போகும் ஆவியை
மோட்சானந்தத்திலே
அவர் சேர்த்ததைத் தம்மண்டை
மகிழ்ச்சியாகவே