Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா
1. தூய தூய தூயரே! சர்வ வல்ல தேவா!
உமக்கே காலை தோறும் சங்கீதம் ஏறுமே;
தூய தூய தூயரே! காருண்ய வல்லவா!
மூவ ரொன்றான பாக்ய த்ருத்வமே!
2. தூய தூய தூயரே! பரிசுத்தவான்கள்
தேவ ஆசனமுன்னர் தம் க்ரீடம் வைப்பாரே;
கேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று
இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே!
3. தூய தூய தூயரே! ஜோதிப்ரகாசா!
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே பரிசுத்தர் வேறு யாருமிலர்
தூய்மை வல்லமை அன்பும் நிறைந்தோர்!
4. தூய தூய தூயரே! சர்வ வல்ல தேவா!
வானம் பூமி ஆழி உம்மைத் துதி செய்யுமே
தூய தூய தூயரே! காருண்ய வல்லவா!
மூவ ரொன்றான பாக்ய த்ருத்வமே!