Thukkam Thegil Irul Soola – துக்கம் திகில் இருள் சூழ
துக்கம் திகில் இருள் சூழ
மோட்ச யாத்திரை செய்கிறோம்
கீதம்பாடி முன்னே நோக்கி
மோட்ச பாதை செல்கிறோம்
இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
தீப ஸ்தம்ப ஜோதியும்
வீரமாக ஐக்கியமாக
முன்னே செல்வோம் ராவிலும்
பக்தரோடு தங்கிச் செல்லும்
தெய்வமாம் ஒளி ஒன்றே
இருள் நீங்க அச்சம் நீங்கும்
பாதை முற்றும் பகலே
எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே
குன்றா விசுவாசமும்
எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே
ஒன்றே என் நம்பிக்கையும்
மோட்சம் செல்லும் கோடிப்பேரும்
பாடும் பாட்டு ஒன்றேயாம்
ஆபத்து போராட்டம், தெய்வ
பாதை செல்வதும் ஒன்றாம்
மோட்ச கரை சேர்ந்த பின்னும்
பூரிப்பானந்தம் ஒன்றே
ஒரே சர்வ வல்ல பிதா
அன்பால் அரசாள்வாரே
முன்னே செல்வீர், தோழரே நீர்
சிலுவை உம் பலமாம்
நிந்தை தாங்கிப் போர்புரிவீர்
ஆயுள் காலம் எல்லாம்
நியாயத் தீர்ப்பு மா தினத்தில்
கல்லறை விட்டெழுவோம்
துக்கம் திகில் யாவும் நீங்கும்
பாடும் ராவும் ஓய்ந்துபோம்