Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க
Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க
தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க
தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே
ஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திட
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்
மகிமையின் சாயலை மணவாட்டி அணிய
வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ
பொன்னிற வீதியில் நடந்துமே உலாவும்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்
துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்
பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவே
தூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்
திருடனை போல நானும் வருவேன்
தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள்
அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தாள்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்
மன்னவர் இயேசுவை விண்ணவரோடு
முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட
பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடு ம்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான்
விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான்
இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்