Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும்
பல்லவி
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த நரரே வந்து சேரும்
அனுபல்லவி
அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா
சரணங்கள்
1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்
2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்
3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்
4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்