உமது பேரன்புகேற்ப – Umathu Peranbukerpa

Deal Score0
Deal Score0

உமது பேரன்புகேற்ப – Umathu Peranbukerpa, Nal Meippar Geethangal songs. Tamil Christians song. Written, tune by C.vasanthakumar, நல் மேய்ப்பர் கீதங்கள் சி.வசந்தகுமார்.

“என்னை ஜீவபலியாய் ” பாடல் மெட்டில் திருப்பாடல் 51 ஐ வடிவமைத்துத்
தயாரித்தவர் – சி. வசந்தகுமார்.

இசை இயக்கம்
திரு. அப்பாக்குடம் மாணிக்கவாசகம் (Monicks)

பாடல்:

பல்லவி
உமது பேரன்புகேற்ப
எனக்கு இரங்கும் தேவரீர்

அனுபல்லவி
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
எனது குற்றங்களைத் துடைத்தருளும்

சரணங்கள்:

  1. என் குற்றம் உணர்கின்றேன்;
    என் பாவம் கண்முன்னே நிற்கின்றது.
    தீவினையோடு என் வாழ்வுத் தொடக்கம்
    பாவத்தோடே என்னைக் கருத்தாங்கினாள்.
  2. உள்ளத்து உண்மையையே
    உன்னதமானவர் விரும்புவது
    மெய்ஞானத்தால் என்றென்றும் நீர்
    என் மனத்தை நிரப்பியருளும்.
  3. தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே
    தூயவர் படைத்தருளும்;
    உறுதியும் புதுமையுமான ஆவியை
    உருவாக்கி எனக்குத் தந்தருளும்
  4. நொறுங்கிய நெஞ்சமே – (என்)
    நேசருக்கேற்ற பலியாகும்;
    நொறுங்குண்ட நருங்குண்ட உள்ளத்தை நீர்
    அவமதிப்பதில்லை, தள்ளிவிடுவதில்லை.
  5. என்னைத் தள்ளாதேயும்
    உம் ஆவியை எடுக்காமலிரும்
    உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் தந்து தன்னார்வ
    மனம் தந்து எனைத் தாங்கியருளும்.
  6. என் உதடுகளைத் திறவும் ஆண்டவா,
    என் வாய் உம் புகழ் பாடும்
    மகிழ்வொலியை நான் கேட்கும்படி செய்யும்; (நீர்)
    நொறுக்கிய (என்) எலும்புகள் களிகூரும்

உமது பேரன்புகேற்ப song lyrics, Umathu Peranbukerpa song lyrics

Umathu Peranbukerpa song lyrics in English

Umathu Peranbukerpa

The Band: Song Power Music A. Monicks ASH
Vocal: Sis. Jaya
Keys: Kutty Joy
Violin: Rajagopal
Veena & Flute: Mithun
Guitars: Sam, Monicks & Chris
Rhythm Programming: John Malamari
Indian Percussion: Anish Arul

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo