Seeyoan Seeyoan – சீயோன் சீயோன்
Seeyoan Seeyoan – சீயோன் சீயோன்
பல்லவி
சீயோன்! சீயோன்!!!
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சரணங்கள்
1. தேகமாம் திரைச்சீலையைக் கிழித்தே
நூதனமாம் ஜீவமார்க்கமதைத் திறந்தார்
இயேசுவோடு
பாடுகள் சகித்த சுத்தர்கள்
சீயோனிலே ஆளுகை செய்வர் –. சீயோன்!
2. துக்கமும் கிருபையும் நிறைந்தோராய்
சத்தமிடா ஆட்டைப் போல தத்தம் செய்தாரே
அழுகையின் தாழ்வதில் நிதம் உருவ நடந்தே
பெலன் அடைந்தே சீயோன் சேருவர் — சீயோன்!
3. சாலகமாம் நிந்தை வழி ஏகியே
சாலேமையும் சீயோனையும் வென்றடைந்தனர்
இயேசுவோடு நிந்தையைச் சுமந்து சென்றவர்
சீயோனிலே சந்தோஷிப்பரே — சீயோன்!
4. இருதயத்தின் செவ்வையான வழியதில் .
தீட்டும் திருடும் அருவருப்பும் பொய்யர் அதிலில்லை
கற்புள்ளவராயும் கபடமில்லாதவராய்
சீயோனிலே காணப்படுவர் — சீயோன்!
5. பரிசுத்தமே அதின் அலங்காரமே
பரிசுத்த பர்வதத்திலே வாசம் செய்பவர்
ஆவி ஆத்மா தேகமதில் பரிசுத்தருமே
சீயோனைச் சுதந்தரிப்பரே — சீயோன்!
Seeyoan! Seeyoan!!
Sarva boomiyin magilchiyum neeyay
Maa maga raajan dhivya nagaramay
Magimaiyaai ilangidum sigaramay
1 Dheigamaam thiraiseelaiyai kilithay
Noodhanamaam jeeva maarkamadhai thirandhaar
Yeisuvoadu paadugal sagitha suthargal
Seeyoanilay aalugai seivar
2 Dhukamum kirubaiyum niraindhoaraai
Sathamidaa aatai poala thatham seidhaaray
Alugaiyin thaalvadhil nidham uruva nadandhay
Belan adaindhay Seeyoan seiruvar
3 Saalagamaam nindhai vali eigiyay
Saaleimaiyum Seeyoanaiyum vendradaindhanar
Yeisuvoadu nindhaiyai sumandhu sendravar
Seeyoanilay sandhoashiparay
4 lrudhayathin sev-vaiyaana valiyadhil
Theetum thirudum aruvaruppum poyyar adhilillai
Karpuliavaraayum kabadamilaadhavaraai
Seeyoanilay kaanapaduvar
5 Parisuthamay adhin alangaaramay
Parisutha parvadhathilay vaasam seibavar
Aavi aathma dheigamadhil parisutharae
Seeyoanai sudhandhariparay