உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven
உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத் தான்
1. உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்
3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
6. உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
7. பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்
உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven