Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அற்புதமானதே
உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே
சரணங்கள்
1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்
2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவுதான் மா விந்தையானதே
3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்
4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட