Ummun Nirka Devae – உம்முன் நிற்க தேவே
1. உம்முன் நிற்க தேவே!
எந் நிலை காட்டுமேன்!
நான் பாடிடும் எக் கேள்விக்கும்
விடை யளிப்பேனே
பல்லவி
கெஞ்சும் வேளையில் உம் கிருபையால்
நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா!
2. முன் போல் நானிப்போதும்
சன்மார்க்க ஜீவியா?
உம் ஆவி நிறைந்தவனாய்
பின்பற்றி வாறேனா? – கெஞ்சும்
3. எண்ணம் செய்கையிலும்
என்னுள்ளம் சுத்தமா?
எந்த நாளும் என் இரட்சிப்பை
நான் காத்துக் கொண்டேனா? – கெஞ்சும்
4. முன்னுள்ள வைராக்கியம்
இந்நாளிலுமுண்டா?
உம் ஊழியத்தில் இன்னும் நான்
இன்பம் காண்கிறேனா? – கெஞ்சும்
5. துன்பமில்லா இடம்
தேடி நான் செல்வேனா?
வன் போர்தனில் நிலையாது
மாறுபவன் நானா? – கெஞ்சும்