Unakethu Venum Innum Yethu Venum – உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்
பல்லவி
உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்?
பின்னும் எது வேணும்? சொல் பாவியே
உடல் அழிந்து போகும் முன்னமே!
சரணங்கள்
1. பாவத்தோடெதிர்த்துப் பகவானைச் சேவித்துப்
பாடித்துதிக்க வேணுமா? வேணுமா? இல்லால்
பகவானோ டெதிர்த்து மாய வலையிற்பட்டு
மாண்டு தொடர வேணுமா? – உனக்கெது
2. பாவத்தை விட்டு நீ பக்தனாக ஜீவித்து
பதவி பெற்றிட வேணுமா? வேணுமா? இல்லால்
பாவ வலைக்குட் சிக்கி, மோசம் செய்கின்ற பேயைப்
பற்றித் தொடர வேணுமா? – உனக்கெது
3. என் ஆத்துமத்தைச் சுத்தம் செய்து காக்கின்ற
அப்பனார் அருள் வேணுமா? வேணுமா? பெருந்
தண்டனைக் குட்பட்டுத் தட்டுக் கெட்டலையும்
சாத்தான் உறவு வேணுமா? – உனக்கெது
4. மனம் மாறிப் பிறந்து நீ மாசற்று ஜீவிக்க
மகத்வன் கிருபை வேணுமா? வேணுமா? மிக
பாச வலையை வீசி நேசத்தைக் காட்டிப் பின்
மோசஞ் செய் மதம் வேணுமா? – உனக்கெது