உன்னையன்றி வேறே கெதி – Unnaiyandri veare Keathi song lyrics

Deal Score+5
Deal Score+5

உன்னையன்றி வேறே கெதி – Unnaiyandri veare Keathi song lyrics

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!
தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!

அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ

1.பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ

2.அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து – க்ருபைவை யேசு ஸ்வாமீ

3.எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே மேழைப் புலபும்
பேதையைக் கடைத் தேற்றிப் – பிழைக்கவை யேசு ஸ்வாமீ

4.கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் – உருகவை யேசு ஸ்வாமீ

Unnaiyandri veare Keathi song lyrics in English

Unnaiyandri veare Keathi oruvarillaiyae Swami
Thannaiyae Paliyaai Eentha Mannuir Ratchakanae

Annai Thanthai uttraar Suttraar Aarumuthavuvaro
Athisaya Manuvealaa Aasai En Yesu Swami

1.Pannina Thoragamellaam Ennina Leththanai Koadi
Paathakaththuku Undo Ellai Parathaviththeanae Theadi
Kanninaalun Thiruvadi Kaana Naan thagu Pothaan
Kadaiyanukkarul Puri Madiyumun Yesu Swamai

2.Anajiyanji Thoora Nintren Sanjalangalai Naan Solli
Alaikadal Thurumpoal Malaivu Kaondea Nanaiyae
Kenji Kenji koovumintha Vanjakan Mugam Paaraai
Kitti Ennidam Searnthu Kirubaiyaaga Yesu Swamai

3.Eththanai Kattraalum Deva Bakthiyeathu Mattra Paavi
Evvaluv Puththikettum Avvalavukkathi thoshi
Piththanai Pola Pithattri Kaththiyae Mealai Pulapum
Peathaikai kadai theattri Pilaikkavae Yesu Swamai

4.Kallanaam Kabadanennai Thallivittalaavathenna
Kallaipoal Kadanam Konda Karma Sandaalan Paalum
Ullamunkarainthae Untran Uyar Siluvaiyinan Paal
Ulaiyilitta Mealukkaai Urukavai Yesu Swamai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo