Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை

Deal Score0
Deal Score0

பல்லவி
உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே.

அனுபல்லவி

அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன்

சரணங்கள்

1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமே
வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்து ப்ரகாசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன்

2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்
பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்;
கானகம் மலைசென்று கடும்பணி குளிர் வென்று
போனகம் நீரகன்று புவியி லுழைத்த யேசு. – உன்றன்

3. காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து,-உடல்
பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,
பகைவர் திருடர் மோசமும்,
சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. – உன்றன்

4. வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே,-இனி
என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய
இசைந்தென் மனது நாடுதே;
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று,
நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு. – உன்றன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo