Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்
1. உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்,
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.
2. ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்;
தூய அமைதியில் தங்கி
துயிலும்.
3. பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.
4. ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.