Vaalthuvom kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை
1. வாழ்த்துவோம் கர்த்தரை
தெரிந்தெடுத்தாரே
ஆத்மா தேகம் ஆவியோடும்
எழுந்து வாழ்த்துவோம்
வாழ்த்துவோம் கர்த்தரை
அல்லேலூயா
2. மகிமை நிறைந்த
உன்னதராயினும்
பரிசுத்த நாமத்தை
எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம்
3. உம் பலிபீடத்தின்
ஜூவாலையில் நிரப்பி
உதட்டை சுத்தம் செய்துமே
பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம்
4. கர்த்தர் பலன் கீதம்
இரட்சிப்பு மாவாரே
அவரன்பு வெளிப்பட்டதே
வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம்
5. வாழ்த்துவோம் கர்த்தரை
வணங்கி போற்றுவோம்
மகிமை இராஜாவின் நாமத்தை
என்றென்றும் துதிப்போம் – வாழ்த்துவோம்