Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே
1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!
வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர்,
ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
ஈந்ததற்தாய்த் தோத்ரம்!
2. பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர்,
கோவத்துக்கேயுரியர்,-வறியர்
ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த
ஆண்டவரே, தோத்ரம்!
3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை
வருடநாற்பது காத்தீர்!-அந்த
வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய
வானவரே, தோத்ரம்!
4. ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை
அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா!
போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்;
புண்ணியரே, தோத்ரம்!
5. பெரிய உம்நாமம் பேருலகோங்க,
வறியவர் மிடியகல,-இவ்வீவை
அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும்
நெறியெமக் கீத்தருள்வீர்!
6. திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்
தேவரீர் பயிர்க்காரர்,-திருவே,
ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை
அழகிய கதிர்மணியாய்!