Vaarum Devaa Vaarum -வாரும் தேவா வாரும்
1. வாரும் தேவா! வாரும்
உள்ளம் உம் வீடாகும்!
என்னாத்தும பாவம் நீக்கும்
என்னுடன் தங்கிடும்
கருணைக் கடலே!
இம்மைச் செல்வம் குப்பை!
ஆனால் நீரே நிலைப்பவர்!
உம்மையே தந்திடும்!
2. வாரும் தேவா வாரும்
உம் பலம் காட்டிடும்!
பாவம் போக்கி சுத்தமாக்கும்!
இப்போ விடுவியும்!
நல் வாக்குத் தந்தீரே!
நம்பினேன் கைதூக்கும்!
வல்ல இம்மானுவேலரே
உம்மிலென் நம்பிக்கை
3. தேவா! எனில் வந்தீர்
உணர்ந்தேன் நான் அதை!
உன் குறை நீக்கினேன் என்ற
உம் சத்தம் கேட்கிறேன்!
உமக்கே மகிமை!
வான் புவி கூறட்டும்!
உயிர்த்தெழுந்த நேசர் நீர்
என்னில் வசிக்கிறீர்!