Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும்

Deal Score0
Deal Score0

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.

சரணங்கள்

1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே – வெகு
கெடும் நீண்டதே. – வாரும்

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே-மிகக்
கஷ்டம் ஆச்சுதே. – வாரும்

3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே- மிகக்
கஷ்டம் ஆச்சுதே. – வாரும்

4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா- நரர்
தயங்கிறோம் மெய்யாய். – வாரும்

5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே – எங்கள்
தயங்கல் தீருமே. – வாரும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo