Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே
1. வாரும் நித்திய ஆவியே!
தாரும் தவிப்பவர்க்கு;
பாரில் இயேசு பாடால் வந்த
பலன் யாவும் முற்றுமாய்
பல்லவி
நேசமுள்ள இயேசுவுக்காய்,
தாசன் நானென் யாவையும்
பாசமாய் இதோ படைத்து
பற்றினேன் சிலுவையை
2. அவரடைந்த கஸ்தியும்
அதால் வந்த ரட்சையும்
அறிந்த நித்திய ஆவியே!
எனக் கதைப் போதியும் – நேசமுள்ள
3. அவர் மரணக் காட்சியை
நேரில் கண்ட சாட்சியே
நீரே எனக்கு கிறிஸ்துவின்
நேச ரூபம் காட்டிடும் – நேசமுள்ள
4. நாம் வதைத்திட்ட நாதனை
எண்ணினால் மா வேதனை
தாமீந்திட்ட மீட்பதனை
தந்துதவும் ஆவியே! – நேசமுள்ள