Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள்
பல்லவி
வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,
வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!
சரணங்கள்
1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல
2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல
3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த
ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல
4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே – வல்ல