Valla Devan Kooruvithu – வல்ல தேவன் கூறுவித்து
1. வல்ல தேவன் கூறுவித்து
சொல்லும் வாக்கைக் கேளுமேன்
உந்தன் மேல் என் கண்ணை வைத்து
என்றும் பாதை காட்டுவேன்
பல்லவி
உந்தன் மேல் என் கண்ணை வைத்து
என்றும் பாதை காட்டுவேன்
இன்ப மோட்சம் சேருமட்டும்
என்றும் பாதை காட்டுவேன்!
2. சாத்தான் மாம்சம் லோகத்தாலும்
ஆத்மா சோர்ந்து போவதேன்?
எந்தன் ஆவி வாக்கினாலும்
என்றும் பாதை காட்டுவேன் – உந்தன்
3. துன்பம் துக்கம் நேரிட்டாலும்
இன்பமாக மாற்றுவேன்
என்ன சோதனை வந்தாலும்
என்றும் பாதை காட்டுவேன் – உந்தன்