Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன்

Deal Score0
Deal Score0

பல்லவி

வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே,
வந்தே கடைக்கண் பாருமேன்.

சரணங்கள்

1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி,
எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே

2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே;
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே

3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ!
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே

4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! – வந்தே

5. மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்;
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். – வந்தே

6. எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்?
அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. – வந்தே

7. வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. – வந்தே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo