Vanthu Aaviyae Thangum – வந்து ஆவியே தங்கும்
பல்லவி
வந்து ஆவியே தங்கும்! தங்கும் தாவியே,
எந்த னாத்மந்தனில் இறங்கி இந்நாளில்!
சரணங்கள்
1. இயேசுவின் கிருபையால் சொந்தம் நீராகையால்
மைந்தன் நம்பினேனே வந்தருளென் கோனே!
எந்த னுள்ளமே ஏதேன் வனம்போல்
எழிலுறப்பண்ணும் இயேசின் பலி எண்ணும்! – வந்து
2. தாபந்தமாய்த் தானே தவிக்கிறேன் நானே;
பாவம் போக்குவையே பரிசுத்தாவியே!
உந்தன் பதியாய் என்னுள்ளம் மெய்யாய்
இருக்கச் செய் தேவே! இடர் நீக்கிக் கோவே! – வந்து
3. அலகைப் பாவமும் உலகப் பாசமும்
அடியேன் துறக்க அருள்செய் சிறக்க
என்று மெனதே உனதாவதே
இன்றும் என்றும் நாதா எனையாளும் வேதா! – வந்து
4. தேவா! உம்மைப் பார்த்து ஜெபிக்கிறேன் காத்து
தாரும் அருளுடன் ஜீவனும் எனக்கு
நித்ய காலமும் சத்ய தேவனே
பக்தரோடும் வீட்டில் சேரும் வானநாட்டில் – வந்து