Vareroo Deva Ennandai – வாறீரோ தேவா என்னண்டை
பல்லவி
வாறீரோ தேவா! என்னண்டை!
அனுபல்லவி
என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி
1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ
2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ
3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாறீரோ
4.சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா ! சுக்தி தா சிறக்க – வாறீரோ
5.சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று,
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்றி – வாரீரோ