Varumaiya Ennulathilae – வாருமையா என்னுள்ளத்திலே
பல்லவி
வாருமையா என்னுள்ளத்திலே! – தேவா
வாருமையா என்னுள்ளத்திலே!
சரணங்கள்
1. வேதனையுண்டாக்கும் வேர்
யாவையும் நீர் பிடுங்க – வாருமையா
2. சாலொமோன் தேவாலயத்தில்
மேகம்போல் வந்தவரே – வாருமையா
3. சோதனை நாட்களிலே
நாதனே உம்மை நம்ப – வாருமையா
4. முச் சத்துராதிகளை
நிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா
5. போதனை செய்பவற்றை
சாதனை செய்திடவே – வாருமையா
6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்
வந்த பரிசுத்தரே! – வாருமையா