Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள்
பல்லவி
வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்
அனுபல்லவி
பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர்
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு
சரணங்கள்
1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு
2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க
ஞான கானம் பாடநல்லோர் சபை தொடங்க – வரு
3.விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் – வரு