Vazhthugiraen Yesu Swami – வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி

Deal Score0
Deal Score0

வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முழுதும்
அடியேனைக் காத்தீரே
வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி
வாழ்த்துகிறேன் இக்காலையிலே

1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும்

2. பல விதமாம் சோதனைகள்
எமைச் சூழ வந்திருந்தும்
ஒன்றும் எம்மை அணுகாமல்
அன்புடனே பாதுகாத்தீர்

3. பாவம் ஒன்றும் அணுகிடாமல்
பரிசுத்தமாய் பாதைச் செல்ல
தேவையான சர்வாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்

4. படைக்கின்றேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கை காலுமாக

5. நேசரே உம் திரு வருகை
இந்நாளினிலே இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும்

Vazhthugiraen Yesu Swami
Vazhthugiraen Ikkalaiyilae
Arputhamaai Raa Muzhudhum
Adiyeanaik Kaatheerae
Vazhthugiraen Yesu Swami
Vazhthugiraen Ikkalaiyilae

1. Umadhu Settai Nizhalathilae
Paduthirundhen Raa Muzhudhum
Umadhu Karam Annaithidavae
Aarudhalaam Niththiraiyum

2. Palavidhamaam Sodhanaigal
Emmai Choozha Vandhirunthum
Ondrum Emmai Annugaamal
Anbudanae Paadhugatheer

3. Paavam Ondrum Annugidaamal
Parisuththamaai Paadhai Chella
Thevaiyaana Sarvaayudhangal
Thaarum Jeba Aaviyudan

4. Padaikkindraen En Irudhayaththai
Balibeedathil Muttrumaaga
Kanngaludan Seviyodu
Vaayum Kai Kaalumaaga

5. Nesarae Um Thiru Varugai
Innalinilae Irundhidinum
Aasaiyudan Sandhikkavae
Aayaththamaai Vaiththukkollum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo