Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய
பல்லவி
வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசு
ராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே!
சரணங்கள்
1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,
அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர
2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்
பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர
3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,
ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர
4. நரக பாதையில் விரைந்து செல்வோரை
இரக்கமுள்ள இயேசுவண்டை இழுத்துக் கொள்ளுவோம் – வீர
5. சேனையிலே நாம் நல்ல சேவகம் செய்வோம்
வானத்திற்கு ஏகு மட்டும் சோதனை வெல்வோம் – வீர