Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த

Deal Score0
Deal Score0

பல்லவி

வெள்ளை அங்கிகள் தரித்த
விமல முத்தர் இவர் யார்?

அனுபல்லவி

கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை

சரணங்கள்

1. நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர் இவர்;
கோணாது துன்பக் கடலில்
குளித்துவந்தவர் இவர். – வெள்ளை

2. குருத் தோலைகள் பிடித்துக்
கொற்றவனைச் சூழநிற்கும்
பெருத்த கூட்டத்தார் இவர்;
பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை

3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர் இவர்;
தேட்டமுடனே நாயனைச்
சேவித்து நிற்கின்றார் நித்தம். – வெள்ளை

4. பசிதாகம் யாவுமற்றார்;
பாக்கிய நிலைமை பெற்றார்;
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
உகுக்கா வாழ்வினை யுற்றார். – வெள்ளை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo