Vinnarasar Paatham vezhnthu – விண்ணரசர் பாதம் வீழ்ந்து
1. விண்ணரசர் பாதம் வீழ்ந்து
என் ஆத்மமே போற்றிடு
மன்னித்து சீராக்கி மீட்ட
கர்த்தர் போல் வேறாருளர்?
போற்றிடுவோம்! போற்றிடுவோம்!
நித்திய ராஜ ராஜனை
2. நம் முன்னோர்கள் மேலே அவர்
கிருபை தயை கூர்ந்தாரே;
நேற்றும் இன்றும் என்றும் மாறார்
சிட்சித் தாசீர் வதிப்பார்,
போற்றிடுவோம்! போற்றிடுவோம்!
மகிமைப் பிரதாபரை
3. தந்தைபோல் இரங்கும் கர்த்தர்
நம் உருவம் அறிவார்
தம் கையால் தாங்கியே மீட்பார்
சத்துரு பயம் நீக்குவார்
போற்றிடுவோம்! போற்றிடுவோம்!
அவர் கிருபை பெரிதாம்
4. வான தூதர் போற்றுகின்றீர்
நீவிர் நேரில் காண்பீரே
சூர்ய சந்திரன் தாள்பணிய
மாந்தர் நீரும் போற்றுமே
போற்றிடுவோம், போற்றிடுவோம்
கிருபை தேவனை என்றும்