Vinthai Meetpar Ninthai Neeka – விந்தை மீட்பர் நிந்தை நீக்க
விந்தை மீட்பர் நிந்தை நீக்க
கந்தை அணிந்து வந்தார் பாரில்
மந்தை ஆயர் சாஸ்திரி மூவர்
மகிழ்ந்து பணிந்தார் பாரீர்
செல்வோம், செல்வோம்
நாமும் செல்வோம்
பாவியை மீட்க வந்த
பாலனை பணிய
செல்வோம், செல்வோம், செல்வோம்
1. ஓய்ந்திடாது போற்றும் பரம சேனை
ஒய்யாரமாய் மீட்டும் இசைவேளை
ஒப்பில்லா அந்த இனிய இசையில்
ஒன்றிட நாமும் செல்வோமே
2. ஆர்ப்பரிக்கும் அந்த வானோர் கூட்டம்
ஆரவாரம் விண்ணை பிளந்திடுமே
ஆனந்தம் மிக்க தொனியில் திளைக்க
ஆர்வமாய் நாமும் செல்வோமே
3. கனிவாக பாடும் தேவதூதர்
கவர்ந்திடும் கான தேன் மழையில்
கருத்து மிக்க பாடல்கள் பாடிட
கருத்தாய் நாமும் செல்வோமே