Virumbathey Manamae – விரும்பாதே மனமே

Deal Score0
Deal Score0

பல்லவி

விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை
விரும்பாதே, மனமே;-பதவி என.

சரணங்கள்

1. தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்
கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை – விரும்பாதே

2. அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா
மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் – விரும்பாதே

3. பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்,
ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். – விரும்பாதே

4. திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே
அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும். – விரும்பாதே

5. பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்,
என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ – விரும்பாதே

6. லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு,
ஏக பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே. – விரும்பாதே

7. நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு. – விரும்பாதே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo