Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
பல்லவி
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
சரணங்கள்
1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு
2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு
3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு
4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு
5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்?-அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். – விசு
6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்;-தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். – விசு