Worship Medley 6 Benny Joshua – Ennai Kaakum Unga Kirubaidhan Hallalujah Devanukey
என்னை காக்கும் தேவன் உண்டு
நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு-2
தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்-2
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்-2
சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே
கொள்ளை நோய்களிலும்
நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை
தந்தென்னை ஆதரித்தீர்
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே-2
உன்னை காக்கும் தேவன் உண்டு
நீ கலங்கிடும் நேரம் கிருபை உண்டு-2
கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே-2
உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது-2
– கிருபையே
உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது-2
– கிருபையே
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே-2
கண்ணீரை நீக்கி காங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுமே-2
ஆராதனை ஆராதனை-2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே-2
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா இராஜனுக்கே-2
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார்-2-ஆராதனை