Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன்

Deal Score0
Deal Score0

1. யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன் ?
என் கதியும் பங்கும் யார் ,
நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

2. யார் நான் நிற்கும் கன்மலை ,
யார் என் திட நம்பிக்கை ?
குற்றத்தை சுமந்தோர் யார் ,
தெய்வ நேசம் தந்தோர் யார் ?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார்,
ஆத்துமத்தின் சாரம் யார் ?
யாரால் பாவி நீதிமான்,
யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால் .

4. கஸ்தியில் சகாயர் யார்,
சாவின் சாவு ஆனோர் யார் ?
என்னை தூதர் கூட்டத்தில்,
சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

5. இயேசு தான் என் ஞானமே ,
அவர் என் சங்கீதமே :
நீங்களும் புகழுங்கள் ,
அவரைப் பின் செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை .

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo