யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai
யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான்
தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே
நம்பிக்கை வைத்துளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்
1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
அல்லேலூயா நீ தினம் பாடு
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நமக்குள் வாழ்கிறார்
2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
மாபெரும் கடலை உருவாக்கினார்
அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
ராஜரீகம் செய்கின்றார்
3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
திக்கற்ற பிள்ளைகளை
4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்
பசியுற்றோரை போஷிக்கின்றார்
ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்
நியாயம் செய்கின்றார் (நீதி)