Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் song lyrics
யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)
நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா
சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே தூயஆவியே
உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா