Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி
பல்லவி
ஏசு நாயகனை துதி செய்,செய்
செய், செய், செய் ஏசு நாயகனை
சரணங்கள்
1.பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே
பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும்
பொய், பொய், பொய், பொய், பொய்,- ஏசு
2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்
வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது
மெய், மெய், மெய், மெய், மெய் – ஏசு
3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி கதிர் மீன் முதல் பொருளதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை, வை, வை, வை, வை – ஏசு
4.நாதபூத பௌதீக ஸ்தாபகனை, வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய், உய், உய், உய், உய், – ஏசு