Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்
சரணங்கள்
1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம்
இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே
2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர்
பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர்
3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர்
சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர்
4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில்
வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர்
5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம்
சற்றும் மாறாது; ஜீவிக்கும் இயேசு நல்லவர்
6. கஷ்ட துன்பத்தில் ஆறுதலளிப்போன் – எனக்
கிஷ்ட துணைவரா மென்றும் இயேசு நல்லவர்
7. நல்லவர் இயேசு எனக் கண்டறிந்தவர் – தத்தம்
அல்ல லொழிந் தானந்திப்பார் இயேசு நல்லவர்
8. நன்றியோடே நான் எந்நாளுமவரை – அதி
வந்தனஞ் செய்து களிப்பேன் இயேசு நல்லவர்