Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம்

Deal Score0
Deal Score0

1 இயேசு, உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக.

2 லோகம் தன் சந்தோஷமான
நரக வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான், இயேசுவே,
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்,
அப்போ மோசங்கள் கலையும்.

3 எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்கநுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்;
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்.

4 நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே;
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும், இயேசுவே;
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக.

5 இயேசு, உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக்கொள்வீராக.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo