Yesuvae Neer Ennai Lyrics – இயேசுவே நீர் என்னை

Deal Score+1
Deal Score+1

Yesuvae Neer Ennai Lyrics – இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால்
கெட்டழிந்து போவேனே
பாவ சோதனைக்குட்பட்டால்
மோசத்திற்குள்ளாவேனே
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

2. நேசரால் கைவிடப்பட்டு
நொந்து போய்த் தவிக்கையில்
ஆபத்தால் நெருக்கப்பட்டு
ஏங்கி அங்கலாய்க்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

3. பாதை எங்கும் அந்தகாரம்
சூழ்ந்து நிற்கும் வேளையில்
கொடிதாம் என் பாவ பாரம்
வேதனை கொடுக்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

4. தந்தை தாயும் மக்கள் நண்பர்
யாருமின்றி ஏங்கினால்
துன்புறுத்தும் தீய வம்பர்
கைகள் என் மேல் ஓங்கினால்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

5. பெலன் என்னிலே ஒடுங்கி
சாகும் நேரம் கிட்டுகில்,
சாத்தான் என்னண்டை நெருங்கி
மோசம் போகப் பார்க்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

Yesuvae Neer Ennai Lyrics in English

1.Yesuvae Neer Ennai Vittaal
Keattalinthu Povaenae
Paava Sothaikku Utpattaal
Mosaththirkullavaeanae
Yesuvae Neer Entraikkum
Thanjam Thanthu Ratchiyum

2.Neasaraal Kaividapattu
Nonthu Poai Thavikkaiyil
Aabaththaal Nearukkapattu
Yeangi Angalaaikkaiyil
Yesuvae Neer Entraikkum
Thanjam Thanthu Ratchiyum

3.Paathai Engum Anthakaaram
Soolnthu Nirkum Vealaiyil
Kodithaam En Paava Paaram
Vedhanai Kodukkaiyil
Yesuvae Neer Entraikkum
Thanjam Thanthu Ratchiyum

4.Thanthai Thaayum Makkal Nanbar
Yaarumintri Yeanginaal
Thunpuruththum Theeya Vambar
Kaikal En Mael Oonginaal
Yesuvae Neer Entraikkum
Thanjam Thanthu Ratchiyum

5.Belan Ennilae Oodungi
Saagum Nearam Kittukil
Saaththaan Ennandai Nerungi
Mosam Poga Paarkkaiyil
Yesuvae Neer Entraikkum
Thanjam Thanthu Ratchiyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo