Yesuve Neer Pothume – இயேசுவே நீர் போதுமே எப்போதுமே
Yesuve Neer Pothume – இயேசுவே நீர் போதுமே எப்போதுமே
இயேசுவே நீர் போதுமே எப்போதுமே
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது
தனிமையின் பாதையில் தவித்திடும்
வேளையில் தாயைப்போல் என்னை தேற்றினீர்
சோதனை நேரத்தில் சோர்ந்து நான் போகையில்
தூக்கியே தோளில் சுமந்தீர்
தாயின் கருவில் கண்டவரே தாங்கி என்னை சுமந்தவரே
தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது – 2
மரணத்தின் பாதையில் மனந்தளர்ந்த நேரத்தில்
மருத்துவராய் வந்தீர்
மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட
மணவாளனாய் வருவீர்
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
என்னை மீட்க ஜீவன் தந்தீர்
இயேசுவே உந்தன் அன்பு ஒன்றே போதுமே
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது