Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics
இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே
தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.
நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே
எங்கிலும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே