Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை
யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
பாசமாய் முயல்வோம் தாசரே
அனுபல்லவி
தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு
வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு
சரணங்கள்
கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
எங்குமே யேசுராசா ஆளவே அவர்
சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்
மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு
வித்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு
மெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்
சத்தயமாக வந்த நித்யர் யேசுவின் பரி
சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற – யேசு
தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க
மாயக் கோட்பாடு முற்றும் மாறவே யேசு
தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்
பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல – யேசு
நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்
செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் அவர்க்
குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து
நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும் – யேசு