Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து
பல்லவி
1. யுத்த வர்க்க மணிந்து
போர் செய்வோம் துணிந்து!
நான் வெல்லப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!
2. பாவத்தைப் பகைத்து
பரிசுத்தம் தரித்து,
போர் செய்யப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!
3. சுத்த மன சாட்சியை
காத்து திவ்விய மாட்சியை
காண்பிக்கப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!
4. சாகுமட்டும் நிலைத்து
சத்துருவைத் தொலைத்து
நான் ஆளப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!