Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும்
1. யுத்தம் மகா கடின மாயினும்
உயர்த்துவோம் நம் கொடியை
சத்துருக்கள் பலவான்களாயினும்
உயர்த்துவோம் நம் கொடியை;
கிறிஸ்து நம் சேனாபதி, பயமேன்?
அவர் போருடை பெலன் ஐயமேன்?
காத்திடுவார் போரில் நான் அறிவேன்
உயர்த்துவோம் நம் கொடியை
2. பகைவர் சேனை தளர்ந்திடுது
உயர்த்துவோம் நம் கொடியை,
அதி தீர்க்கமாய் நாம் போர் புரிவோம்,
உயர்த்துவோம் நம் கொடியை;
பேரிகைகள் முழங்க முன் செல்வோம்
பாரிலெங்கும் கொடி வீசிடுவோம்;
யாவரும் இரட்சிப்படையும் வரை,
உயர்த்துவோம் நம் கொடியை
3. தேவ துரோகிகளாயினும் சிலர்
உயர்த்துவோம் நம் கொடியை
மற்றோர் செய்கையால் தைரியம் குன்றாது
உயர்த்துவோம் நம் கொடியை,
தேவன் உன் முன் செல்கிறார் அச்சமேன்?
எதிரிகள் உன்னைச் சூழ்ந்திடுவார்;
அப்போ தவர் உன் சகாயத்தால்,
உயர்த்துவோம் நம் கொடியை