திரும்பு மனந்திரும்பு – Thirumbu Mannththirumbu

Deal Score+2
Deal Score+2

திரும்பு மனந்திரும்பு – Thirumbu Mannththirumbu

திரும்பு மனந்திரும்பு
பரலோகம் சமீபமே
விரும்பு இயேசுவை விரும்பு – அவர்
வருகை சமீபமே

அனுபல்லவி

காலங்கள் போனால் திரும்பாது
கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு

1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே
நாசம் அடையாதே
மாய உலகத்தின் மயக்கும் பாதையில்
மனதைச் செலுத்தாலே – காலங்கள்

2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே
ஏளனம் செய்யாதே
கடின உள்ளத்தோர் எவரும் மாறிட
சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள்

3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன்
பாசத்தை உணராயோ?
பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே
பரமனைச் சேராயோ? – காலங்கள்

இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்;
அப்பொழுது அகங்காரிகள் யாவரும்
அக்கிரமஞ்செய்கிற யாவரும்
துரும்பாயிருப்பார்கள்;
வரப்போகிற அந்த நாள்
அவர்களைச் சுட்டெரிக்கும்;
அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும்
வைக்காமற்போகும்
என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற
உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்;
அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;
நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய்,
கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
1.For, behold, the day cometh, that shall burn as an oven; and all the proud, yea, and all that do wickedly, shall be stubble: and the day that cometh shall burn them up, saith the LORD of hosts, that it shall leave them neither root nor branch.
2.But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.✝️
மல்கியா :Malachi:4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo