அசட்டை பண்ணாதே – Asattai Pannathae
அசட்டை பண்ணாதே
அவித்து விடாதே
ஆவியானவர் உனக்குள்ளே
அனல்மூட்டு; எரியவிடு
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ
எழுந்து ஒளிவீசு நித்திய
வெளிச்சம் நீ – அசட்டை
1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை
அனுதினம் நீ பேசினால்
வல்லமை வெளிப்படும்
வரங்கள் செயல்படும்
அசட்டை பண்ணாதே
அசதியாயிராதே-அசட்டை
2 .திருவசனம் நீ தினம் தினம் வாசி
சப்தமாய் அறிக்கையிடு
பெருகிடும் உன் ஊற்று
அது நதியாய் பாய்ந்திடும்
3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்)
வேகமாய் வருவார்கள்-உன்
(உன்) கண்கள் அதைக் காணும்
(உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி
4.நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்
நாள்தோறும் நீ பாடினால்
கட்டுக்கள் உடைந்திடும்
கதவுகள் திறந்திடும்
5.கேதாரின் ஆடுகள்
நெபாயோத்தின் கடாக்கள்
பலிபீடத்தில் ஏறும்
மகிமையின் தேவாலயம்
மகிமைப்படுத்துவேன்
6. சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
தேசமாய் மாறிடுவான்
துரிதமாய் செய்திடுவார்
ஏற்றகாலத்திலே – கர்த்தர்