அல்லேலூயா தேவனுக்குத் துதி – Alleluya Devanukku Thuthi Magimaiyae Song lyrics

Deal Score+3
Deal Score+3

அல்லேலூயா தேவனுக்குத் துதி – Alleluya Devanukku Thuthi Magimaiyae Song lyrics

1. அல்லேலூயா தேவனுக்குத் துதி மகிமையே
அதிசயமாய் அற்புதமாய் வழி நடத்தினார்
இரண்டு நூறு ஆண்டுகள் விந்தையாகவே
இறைவன் இயேசு அருளினால் வளர்ந்து பெருகுவோம்.

பல்லவி

உள்ளத்தில் நன்றியால் நிரம்பிப் பாடுவோம்
வெள்ளம் போல் பெருகிடும் இன்ப கீதத்தால்
எள்ளவும் குன்றிடா தேவ கிருபையால்
அகமகிழ்ந்து அல்லேலூயா துதி முழங்குவோம்.

2. கொல்கொதாவின் தியாக அன்பு உள்ளம் கவர்ந்திடத்
தொல்லை ஏற்று அன்பர் பலர் தொண்டு புரிந்தனர்
அல்லும் பகலும் இயேசு என்று பேசித் திரிந்தனர்
கல் மனங்கள் கரைந்து உருக உதிரம் சிந்தினர்.

3.தேவாலயக் கற்கள் பேசும் தியாக சரிதையும்
நிறுவனங்கள் அனைத்தும் கூறும் கண்ணீர்க் கதைகளும்
மேன்மை செல்வம் யாவும் துறந்த அன்புத் தொண்டர்கள்
ஆன்மாக்களின் வேட்கையுடன் மெழுகாய் உருகினார்.

4. தியாகத்தால் எழுந்த சபைகள் வளர்ந்து பெருகவும்
கண்ணீரால் வளர்ந்த சேவை சிறந்து விளங்கவும்
தன்னலம் இல் பொருள் என்றென்றும் ஆகிட
தூய்மை தொண்டு தொடர நாமும் துதித்து மகிழுவோம்.

5.உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் தொண்டின் மகிமையும்
நிமிர்ந்து நோக்கும் நமது சபைகள் பெருமை சேர்த்திடும்
பன்மடங்காய் கிறிஸ்தவர்கள் பெருகி வளர்ந்திட
ஒன்றாய் இணைந்து இயேசுவுக்காய் என்றும் உழைப்போம்.

Alleluya Devanukku Thuthi Magimaiyae Song lyrics in english

1.Alleluya Devanukku Thuthi Magimaiyae
Athisaymaai Arputhamaai Vazhi Nadaththinaar
Irandu Nooru Aandugal Vinthaiyaagavae
Iraivan Yesu Arulinaal Valarnthu Peruguvom

Ullaththil Nantriyaal Nirambi Paaduvom
Vellam Poal Perugidum Inba Geethathaal
Ellalavum Kuntridaa Deva Kirubaiyaal
Agamagilnthu Alleluya Thuthi Mulanguvom

2.Golgothaavin thiyaaga Anbu Ullam Kavarnthida
Thollai Yeattru Anbar Palar Thondu Purinthanar
Allum Pagalum Yesu Entru Peasi Thirinthanar
Kal Managngal Karainthu Uruga Uthiram Sinthinaar

3.Devaalaya Karkkal Peasum Thiyaaga Sarithaiyum
Niruvanangal Anaiththum Koorum Kaaneer Kathaikalum
Meanmai Selvam Yaavum Thurantha Anbu Thondargal
Aanmaakkalin Veatkaiyudan Mealugaai Uruginaar

4.Thiyakaththaal Eluntha Sabaigal Valarnthi Perugavum
Kanneeraal Valarntha Seavai Siranthu Vilangavum
Thannalam Il Porul Entrentum Aagida
Thooimai Thondu Thodara Naamum Thuthtithu Magilum

5.Uyarnthu Nirkkum Koburangal Thondin Magimaiyum
Nimirnthu Nokkum Namathu Sabaigal Perumai Searththidum
Panmadangaai Kiristhavargal Perugi Valarnthida
Ontraai Inainthu Yesuvukkaai Entrum Ulaippom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo