ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics
ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics
ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்